“கேரளாவில் 44 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு..!” - வீணா ஜார்ஜ்
கொசுக்கள் மூலமாகப் பரவும் இந்தத் தொற்று கேரளாவில் அதிகமாகப் பரவுகிறது. ஜிகா வைரஸால் காய்ச்சல், தோலில் நமைச்சல், உடல்வலி, மூட்டுவலி, அரிப்பு, தலைவலி ஆகியவை ஏற்படுகின்றன.
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை பாதிப்புகள் குறைந்து வருகின்றன. ஆனாலும், கேரளாவில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனா 2வது அலையின் பாதிப்பே இன்னும் முடியாத நிலையில், கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொசுக்கள் மூலமாகப் பரவும் இந்தத் தொற்று கேரளாவில் அதிகமாகப் பரவுகிறது. ஜிகா வைரஸால் காய்ச்சல், தோலில் நமைச்சல், உடல்வலி, மூட்டுவலி, அரிப்பு, தலைவலி ஆகியவை ஏற்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் நேற்று முன்தினம் 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் பாதிப்பு எண்ணிக்கை. 41 ஆக அதிகரித்திருந்தது.
இந்நிலையில், ”நேற்று 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. ஜிகா வைரஸை கட்டுப்படுத்த நாங்கள் ஒரு மைக்ரோ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். ரெக்டர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், மாநிலம் முழுவதும் கொசு மருந்து அடிக்கவும் திட்டமிட்டுள்ளோம். திருவனந்தபுரத்தில் இந்த வைர்ஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் நகர் முழுவதும் ஒருவார காலத்திற்குள் கொசு மருந்து அடிக்கப்பட்டும். மாவட்ட மருத்துவ அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவங்கியுள்ளோம், ஜிகா வைரஸ் குறித்த சந்தேகங்கள் தகவல்களைத் தெரிந்துகொள்ளப் பொதுமக்கள் அந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம்” எனக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
