தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
ஆபாசமாகப் பேசுகிறார்கள்! பல யூடியூப் பிரபலங்கள் மீது புகார்
மதன் விவகாரத்தில் ஆன்லைன் விளையாட்டு விரும்பிகளை இழுக்கிறது என்றால், ஜி.பி.முத்து உள்ளிட்ட மற்ற பிரபலங்கள் பலர் வயது பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தங்கள் பக்கம் கவர்ந்து வருகின்றனர்.
சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருக்கிறது. இந்த மாதத்தில் கைது செய்யப்பட்ட மதன் விவகாரம் உள்ளிட்ட பலவற்றை, பற்றிப் பேசும்போது ஜி.பி.முத்து உள்ளிட்ட மற்ற சில யூடியூப் பிரபலங்களைப் பற்றிப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மதன் விவகாரத்தில் ஆன்லைன் விளையாட்டு விரும்பிகளை இழுக்கிறது என்றால், ஜி.பி.முத்து உள்ளிட்ட மற்ற பிரபலங்கள் பலர் வயது பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தங்கள் பக்கம் கவர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோக்களிலும், ஆபாசத்திற்கு எள்ளளவும் பஞ்சமில்லை என்பதுதான் மற்றும் ஒரு வேதனை தரும் உண்மை. இந்நிலையில் தற்போது ஜி.பி முத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் அதிகார மக்கள் இயக்கத்தினர், ஆபாசமாகப் வீடியோக்களை வெளியிடுவதாக குறிப்பிட்டு 8 பேர் மீது புகாரும் கொடுத்துள்ளனர்.