’யூ-டியூப் ஷார்ட்ஸ்’ ஆப் மூலம் மாதம் ரூ.7 லட்சம் சம்பாதிக்கலாம்!
அதிக பார்வையாளர்களைப் பெற்ற 1000 திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களின் காணொளிக்கு வந்த பார்வைகளைப் பொறுத்து அவர்களுக்கு ரூ.74,000 முதல் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக் ஸ்டோரி ஆகியவை போலப் பிரபலமானது யூ-டியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள். யூ-டியூப் நிறுவனம், தனியாக, ’யூ-ட்யூப் ஷார்ட்ஸ்’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்த செயலியில் வீடியோக்கள் பதிவிட்டு அதிக பார்வையாளர்களைப் பெற்றால், இந்திய ரூபாய் மதிப்பில் மாதம் 7 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என யூ-டியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதாவது, ’2020-2021ம் ஆண்டுக்கு 100மில்லியன் டாலர்களை ஷார்ட்ஸ் செயலிக்காக மட்டும் யூ-டியூப் நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. அதிக பார்வையாளர்களைப் பெற்ற 1000 திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களின் காணொளிக்கு வந்த பார்வைகளைப் பொறுத்து அவர்களுக்கு ரூ.74,000 முதல் ரூ.7.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் பார்வையாளர்களை தங்கள் வீடியோக்களை காண, மாதம் பணம் கட்டி பார்க்கச் செய்து, சம்பாதித்துக் கொள்ளலாம். சூப்பர் சாட் என்ற அமைப்பு மூலம் பார்வையாளர்களுடன் பேசி வருவாயை ஈட்டிக் கொள்ளலாம்’ என யூ-டியூபின் தலைமை நிர்வாக அதிகாரி, ராபர்ட் கின் தெரிவித்துள்ளார்
