கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா!
செய்தியாளர்கள் சந்திப்பில் இரண்டாண்டு காலத்தில், அவர் தலைமையிலான பாஜக அரசு கர்நாடகாவில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். பின்னர், முதல்வர் பதவியிலிருந்த தான் ராஜினாமா செய்யப்போவதாக அவர் அறிவித்தார்.
கர்நாடகாவில், கடந்த 2019ம் ஆண்டு, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கலைந்து, பாஜக ஆட்சி அமைத்தது. கர்நாடக முதல்வராக பாஜகவின் எடியூரப்பா கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பதவியேற்றார்.
எடியூரப்பா ராஜினாமா:
இன்று மதியம் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் எடியூரப்பா. செய்தியாளர்கள் சந்திப்பில் இரண்டாண்டு காலத்தில், அவர் தலைமையிலான பாஜக அரசு கர்நாடகாவில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். பின்னர், முதல்வர் பதவியிலிருந்த தான் ராஜினாமா செய்யப்போவதாக அவர் அறிவித்தார். எனது விருப்பப்படியே பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கு எந்த விதமான நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் எடியூரப்பாவிற்கு எதிராக பாஜகவைச் சேர்ந்தவர்களே கருத்து கூறிவந்தனர். எடியூரப்பாவிற்கு 78 வயதாகிவிட்டதால், அவரை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் எனவும் கூறி வந்தனர். சமீபத்தில் தனது மகன் விஜயேந்திராவுடன் அவசரமாக டெல்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது எடியூரப்பா பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாகத் தகவல் வெளியானது. மேலும், அவர் முதல்வராகப் பதவியேற்கும் முன்பே அவர் 2 ஆண்டுகள் முடிந்ததும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டதால், கர்நாடகாவின் அடுத்த முதல்வராக யார் பதவியேற்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Sarvodaya through Antyodaya has been the guiding philosophy of our party. In the last 50 years, upliftment of poor, oppressed, backward communities, senior citizens, women and children has been my priority and I dedicated myself to bring positive changes in the lives of people.
— B.S. Yediyurappa (@BSYBJP) July 26, 2021
