தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
குடி போதையில் இல்லை! கார் ஓட்டியது யாஷிகா தான்... வாக்குமூலம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா ஆனந்திடம், போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்து கார் விபத்து சம்பவத்தில் அவர், வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்து உள்பட நான்கு பேர் பயணித்த கார், இரவு நேரத்தில் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், யாஷிகாவின் தோழி பவானி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்ற இரு நண்பர்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா ஆனந்திடம், போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், பவானி சீட்பெல்ட் அணியாததால் வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
