வீரத்தை வெளிப்படுத்த வேட்டையாடப்பட்ட புலிகள்! தமிழகத்தில் எத்தனை புலிகள் உள்ளன?
கடந்த காலங்களில் புலிகளின் எலும்புகளை வெளிநாட்டிற்குக் கடத்த பல வழிகளில் வேட்டையாடப்பட்டு வந்துள்ளது. புலிகளின் எலும்பிற்கு நல்ல விலை கிடைத்ததால், இத்தகைய கொடூரச் செயல்களை அரங்கேற்றி வந்துள்ளனர்.
பெரிய பூனைகள் என்று அழைக்கப்படும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது மகிழ்ச்சியான செய்தி என்று விலங்கின ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் புலிகள்தான் உணவு சங்கிலியின் கடைசியானது. புலிகள் அதிகரித்தால், காடுகள் வளமாகும் என்பதுதான் ஆர்வலர்களின் கருத்து.
கடந்த வாரத்தில், 49 வயதான கிருஷ்ணன் என்பவர் ஆடு மேய்க்கச் சென்றபோது, புலி தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புலிகளின் இயல்பே வேட்டையாடும் திறன்தான். அவை மனிதனை உண்ணுபதற்காக தாக்குவது மிகவும் குறைவு. தன்னைதான் தற்காத்துக்கொள்ளவும் மனிதர்களைத் தாக்குகின்றன.

தமிழ்நாட்டில் முதுமலை தேசிய புலிகள் காப்பகம், இந்திரா காந்தி வனவிலங்கு காப்பகம் டாப் ஸிலிப், சத்தியமங்கலம் வனவிலங்கு புலிகள் காப்பகம், களக்காடு தலையணை புலிகள் காப்பகம் ஆகியவை உள்ளன. இதற்குமேல் மேகமலை பகுதியில் 5வது புலிகள் காப்பகத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
புலிகள் என்றாலே அச்சம் தானாக ஏற்படும். இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்த கொரோனா நோய் புலிகளையும் விட்டு வைக்கவில்லை. இதில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிகள் இறக்க நேரிட்டது.
இந்தியாவில் ஒருகாலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான புலிகள் இருந்த நிலையில், 2018-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 2,967 புலிகள் மட்டுமே இருந்தன. அதற்கு முந்தைய ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாக இருந்தன. 2006-ம் ஆண்டில் 1,411 புலிகளும், 2010-ம் ஆண்டில் 1,706 புலிகளும், 2014-ம் ஆண்டில் 2,226 புலிகளும் இருந்தன. 2006-ம் ஆண்டுமுதல் புலிகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சியிலேயே இந்த அளவாக உயர்ந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
கடந்த காலங்களில் புலிகளின் எலும்புகளை வெளிநாட்டிற்குக் கடத்த பல வழிகளில் வேட்டையாடப்பட்டு வந்துள்ளது. புலிகளின் எலும்பிற்கு நல்ல விலை கிடைத்ததால், இத்தகைய கொடூரச் செயல்களை அரங்கேற்றி வந்துள்ளனர். அதற்கு முன்பு, அதாவது மன்னர்களின் காலத்திலிருந்தே புலிகளை வேட்டையாடும் நிலை இருந்துள்ளது.

புலிகள் என்பது வலிமையான விலங்கு என்பதால், அதனை வேட்டையாடினால் தங்களின் பலத்தைக் காட்ட முடியும் என்று டஜன் கணக்கில் புலிகளை வேட்டையாடியுள்ளனர். இந்தியாவின் “டிராகுலா” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ஆல்வார் அரசர் ஜெயசிங் புலிகளை வேட்டையாடும் கொடூரமான நபராக இருந்துள்ளார். புலியை பிடித்து உயிருடன், தீயிட்டு கொளுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்திய மன்னர்கள் பலர், பிரிட்டீஷ்காரர்களை மகிழ்விக்க இந்தியாவிலிருந்து புலிகளை வேட்டையாட ஏற்படு செய்து கொடுத்த வரலாறும் இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகத்தான் புலிகளின் எலும்புகளைக் கடத்த பலரும், பல தரப்பிலிருந்தும் புலிகளை வேட்டையாடி வந்தனர். இத்தகைய நிகழ்வுகள் தற்போதும் நடைபெறுவதாகக் கூறப்படுவதுண்டு. வாய்வழி தகவல்களுக்குச் சரியான ஆதாரங்களைக் கண்டறிய முடியவில்லை.
ஆனால் ஆட்கொல்லி புலிகளை, பல இடங்களில் அரசின் ஆதரவுடனே இந்தியாவில் கொல்லப்பட்டது நடந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கூட 2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் மனிதர்களை கொல்லும், புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டன.
ஆனால் புலிகளைப் பாதுகாத்தால் தான் மற்ற உயிரினங்கள் வாழும் சூழல் உருவாகும் என்கிறார்கள் உயிரியல் ஆய்வாளர்கள்.
