தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள்!
பெரிய மலை கோவில்கள், தேவாலயங்கள், வைக்கோல் போர், மர வண்டிகள், கண்காணிப்பு கோபுரங்கள், உயர்ந்த இடங்கள், உயரமாக உள்ள குடிசைகள் என உயரமான எந்த இடமும் ஆபத்தானது. மர வீடுகளில் உள்ள தண்ணீர் குழாய்கள் மற்றும் உலோகப் பொருட்கள் ஆபத்தானதாகும்.
மழைக்காலங்களில் இடி, மின்னல் தாக்கி உயிரிழப்புகளும், பிற சேதங்களும் ஏற்படுவது இயற்கை. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம், இடி, மின்னல் தாக்குதல்களில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும்.
இடி, மின்னல் ஏற்படும் இடங்கள் மற்றும் பொருட்கள் :
- இடி மின்னலின்போது சைக்கிள், இருசக்கர மோட்டார் வாகனம் பயணம் ஆபத்தை உண்டாக்கும்.
- இரும்பிலான கோடாரி, மண்வெட்டி, ஊஞ்சல் மற்றும் தோட்டங்களில் உள்ள இரும்புப்பொருட்கள் ஆபத்தை உண்டாக்கும்.
- பாதுகாப்பற்ற திறந்த வெளி அறையில் மக்கள் கூடுதல் ஆபத்தானது.
- சரக்கு லாரி மற்றும் பெரிய இரும்பிலான வண்டிகளுக்கு அருகில் இருப்பது ஆபத்தானதாகும்.
- வானூர்திகளும் மின்னல் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளவை.
- உயர்ந்த பெரிய மரங்கள் அடங்கிய காடுகளின் விளிம்புகளில் இருப்பது ஆபத்தானதாகும்.
- பெரிய மலைக் கோவில்கள், தேவாலயங்கள், வைக்கோல் போர், மர வண்டிகள், கண்காணிப்பு கோபுரங்கள், உயரமான இடங்கள், உயரமாக உள்ள குடிசைகள் என உயரமான எந்த இடமும் ஆபத்தானது. மர வீடுகளில் உள்ள தண்ணீர் குழாய்கள் மற்றும் உலோகப் பொருட்களும் ஆபத்தானவை.
- பாதுகாப்பற்ற மின் கம்பிகள் மற்றும் உலோக கட்டமைப்புகள் ஆபத்தானவை.
- கொடிக் கம்பம், தொலைக்காட்சி ஆண்டனா, உயரமான உலோகக் குழாய்கள் ஆபத்தானவை.
- ஏரிகள், ஆறுகள், நீச்சல் குளம் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் நிற்கக் கூடாது.
- விளையாட்டு மைதானம், மைதானங்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகும்.
- மலைச்சரிவுப் பகுதிகள் மின்னல் தாக்கும் அபாயம் உண்டு.
இடி, மின்னலின் போது என்ன செய்யவேண்டும் :
- 2 காதுகளையும் அழுத்த மூட வேண்டும். இதனால் ஒலி அதிர்வு குறையும்.
- இடி, மின்னல் போது உடல் ரோமங்கள் சிலிர்க்கும். அப்போது தரையில் அமர்ந்து காதுகளைப் பொத்திக்கொள்ள வேண்டும்.
- தரையோடு தரையாக படுத்துக் கொள்ளலாம்.
- தாழ்ந்து அடர்ந்து வளர்ந்திருக்கும் செடிகளைக் கூடாரமாக்கி தங்கலாம்.
