இரவில் குழந்தை தூங்காமல் அடம்பிடிக்கிறதா..? சில டிப்ஸ்!
‘நான் தூங்கப்போறேன்னு சொன்னா போதும் அலாரம் அடிச்ச மாதிரி எந்திரிச்சுடுவான்’ என்று புலம்பும் தாய்மார்களுக்கு மட்டுமே இந்த கட்டுரை.
குழந்தை பிறக்கும்போது இருக்கும் சந்தோஷத்தைப் போல, அது இரவு முழுவதும் பெற்ற தாயைத் தொல்லை செய்யாமல் தூங்க அனுமதித்தால் அதைவிடச் சந்தோஷம் எதுவும் இல்லை என்று பல பெண்கள் கூறுவதை நாம் கேட்டுள்ளோம். ‘நான் தூங்கப்போறேன்னு சொன்னா போதும் அலாரம் அடிச்ச மாதிரி எந்திரிச்சுடுவான்’ என்று புலம்பும் தாய்மார்களுக்காகவே இந்தக் கட்டுரை.
1.குழந்தையை வசதியாக வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்தது போலக் கதகதப்பாகவும், சுகமாகவும் உறங்க வேண்டும் என்று நினைக்குமாம். அவர்களைத் திறந்த வெளியில் அல்லது ஆள் இல்லாத மிகப்பெரிய அறைகளில் அவர்களைத் தூங்க முயற்சிக்க வைப்பது இயலாத காரியங்களில் ஒன்றாகும். கதகதப்பான ஒரு போர்வை மீது குழந்தையைப் படுக்க வைக்கலாம். தாய் அல்லது தந்தையின் தோள்பட்டைகளில் தூங்கும்போது கருவறையிலிருந்த கதகதப்பும் சுகமும் அதற்குக் கிடைப்பதால் விரைவில் தூங்கிவிடுகிறது.
2. அதிக வெப்பமும் வேண்டாம் குளிரும் வேண்டாம்
குழந்தைகள் தங்களது உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் திறனுடன் பிறக்கவில்லை. வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு அவர்களது உடல்நிலை மாறுவதற்குச் சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். அறையின் வெப்பநிலை ஒரே மாதிரி இருப்பது போலப் பராமரிப்பது அவசியம். உறங்கச் செல்லும்போது பருத்தி ஆடைகளைக் குழந்தைகளுக்கு அணிவிப்பது சிறந்தது.
3. இது இரவா இல்லை பகலா?
குழந்தைகளுக்கு பகல் மற்றும் இரவு என வித்தியாசத்தை உணர முடியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சுற்றிலும் நல்ல ஒளியாக இருக்க வேண்டும் என்பதே. எனவே, விளக்குகளை அணைத்து இருள் சூழும் அந்த தருணம், குழந்தை பதற்றமடைந்து அழத் தொடங்குகிறது. இதனால் ஒரு சிறிய விளக்கை எரிய விடுங்கள். மெல்லிய வெளிச்சம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.
4. கட்டிப்பிடி வைத்தியம் உதவும்
உங்கள் குழந்தைக்கு அரவணைப்பு தேவைப்படும்போது, அதைக் கொடுக்க தவறாதீர்கள். நிச்சயமாக, உங்கள் அரவணைப்பு குழந்தையைக் கதகதப்பாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் உணர வைக்கிறது. நாள் முழுவதும், குழந்தை தூங்குவதும், விளையாடுவதும், அவர்கள் சாப்பிட்டதும் உங்கள் வீட்டு வேலைகளில் நீங்கள் பிஸியாகவும் இருக்கலாம். இரவு நேரங்களில், நீங்கள் தூங்கப் போகும்போது, உங்கள் குழந்தை உங்களது அருகாமையைத் தேடும். உங்கள் அரவணைப்பு இருந்தால் உடனடியாக தூங்கிவிடும்.
