சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகில் உள்ள பூண்டி என்கிற கிராமத்தில் 21 வயது தலித் இளைஞரின் கண்களைக் கட்டி மரத்தில் கட்டி வைத்து நான்கு, ஐந்து பேர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் ராகுல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ஜெயராணி ஆகியோர் வித்யா செந்தமிழ்செல்வனோடு பகிர்ந்துகொண்டவை.