தமிழ்മലയാളംहिंदी
பொழுதுபோக்கு
’வலிமை’ முதல் பாடல் வெளியானது! - அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி
‘நாங்க வேற மாறி..’ என்கிற பாடல், வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தப் பாடலை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இப்படத்தில் கதாநாயகியாகப் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடலை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று, படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாறி..’ பாடல், இரவு 10.45 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர், மாலை 7 மணிக்கு அறிவித்தனர்.
அதேபோல, ‘நாங்க வேற மாறி..’ என்கிற பாடல், வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தப் பாடலை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
