தமிழ்മലയാളംहिंदी
அரசியல்
3ம் பாலினத்தவர்களுக்கு 3 மாதங்களில் தடுப்பூசி..! - உயர் நீதிமன்றம்
”மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை இன்னும் மூன்று மாத காலத்திற்குள் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்
“தங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், அவர்களுக்கு ஏற்கெனவே கொரோனா நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. கூடிய விரைவில் மீதி பணமும் வழங்கப்பட்டுவிடும் எனத் தெரிவித்தார்.
வழக்கு விசாரணை முடிந்த பின்பு பதிலளித்த நீதிபதிகள், ”மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை இன்னும் மூன்று மாத காலத்திற்குள் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
Madras HC orders Tamil Nadu to vaccinate all transgender persons within 3 months https://t.co/YjWujD9I2O
— GRACE BANU (@thirunangai) August 2, 2021
