கோவிட் 19 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வெளிப்படையாக ஒதுக்கவில்லையா?
கோவிட் 19 தடுப்பூசியின் விநியோகம் ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 54,069 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,321 பேர் இறந்துள்ளனர், 68,885 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,00,82,778 ஆக உள்ளது, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,90,63,740 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,91,981 ஆக உள்ளது.
கரோனாவால் தற்போது பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 6,27,057 ஆக உள்ளது.
கரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்களின் சதவீதம் 96.61 ஆகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 5% -த்திற்கும் குறைவாக, அதாவது 3.04% ஆக உள்ளது. தினசரி நேர்மறை விகிதம் 2.91 சதவீதமாக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், “மாநில அரசு / யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 30 கோடி (30,33,27,440) தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 1.89 கோடிக்கு மேல் (1,89,86,504) தடுப்பூசி அளவுகள் மாநில அரசு / யூனியன் பிரதேசங்களிடம் இன்னும் கிடைக்கின்றன.
கோவிட் 19 தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வெளிப்படையாக ஒதுக்கவில்லை என்று சில ஊடக அறிக்கைகள் வந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளில் எந்தவொரு அடிப்படை உண்மையும் இல்லை.
கோவிட் 19 தடுப்பூசியின் விநியோகம் ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories
ரஷ்யாவிலிருந்து ஹைதராபாத் வந்தது ஸ்பூட்னிக் வி தடுப்பூசி
கரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது, தயாராகுங்கள் - மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர்
50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு
ஆக்ஸிஜன் விநியோகம் 5 நிமிடம் தாமதமானதால் 11 கோவிட் - 19 நோயாளிகள் உயிரிழப்பு