மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல் - டிடிவி தினகரன்
தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற திமுக அரசு முன்வராதது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் முதல் முறையாக இன்று பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13 ஆக உள்ளது.
இதேபோல் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு 'சிலிண்டர்' விலை, நேற்று முதல் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.850.50 விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து டிடிவி தினகரன் டிவிட்டரில், “விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல்.
பெட்ரோல் - டீசலுக்கு வாட் வரி குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என்றெல்லாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாநிலத்தில் உள்ள தி.மு.க அரசும் முன்வராதது கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே,கொரோனா பேரிடரனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் இதனால் மேலும் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா?” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories
பெரியார் சிலையில் காவி சாயம் ஊற்றிய விவகாரத்தில் தலைவர்களின் கண்டனம்!
கடந்த ஆட்சியாளர்கள் செய்த அதே தவறுகளை தற்போதைய தமிழக அரசும் செய்வது எங்கே போய் முடியுமோ? - டிடிவி தினகரன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை - அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற உத்தரவு
’பெட்ரோல், டீசல்’ தமிழக அரசால் மட்டும் அதை செய்ய முடியாதா? - டிடிவி தினகரன்