தமிழ்മലയാളംहिंदी
தொழில்நுட்பம்
மின்னொளியில் மின்னும் டோக்கியோ! - நாசா வெளியிட்டுள்ள புகைப்படம்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, இரவில் விளக்கு வெளிச்சத்தில் மின்னும் டோக்கியோ நகரத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. நடப்பாண்டு ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, இரவில் விளக்கு வெளிச்சத்தில் மின்னும் டோக்கியோ நகரத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories
சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டுபிடித்த தமிழர் – புகைப்படம் வெளியிட்ட நாசா
விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்ததா?... பொங்கி எழுந்த இஸ்ரோ தலைவர் சிவன்
செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் நாசா!