தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
தமிழி எழுத்துகள், தமிழ் வட்டெழுத்துகள், தற்போதைய தமிழ் எழுத்து அதாவது கிபி 3ம் நூற்றாண்டு தொடங்கி தற்போது வரையுள்ள 741 தமிழ் எழுத்துகள் கொண்டு திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்துள்ளார்
காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரி கரை தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தம்பதி சுந்தர்- முருகம்மாள். இவர்களது இளைய மகன் கணேஷ். இவர் டிப்ளமோ சிவில் படித்துள்ள இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டுள்ள இவர், ஓய்வு நேரங்களில் பல்வேறு ஓவியங்கள் வரைந்து வருகிறார். பென்சில் ஓவியம் வரைவதில் வல்லவரான இவர், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகர் சூர்யா, புத்தர் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் வரைந்துள்ளார்.

இந்நிலையில், இவர் தற்போது, தமிழி எழுத்துகள், தமிழ் வட்டெழுத்துகள், தற்போதைய தமிழ் எழுத்து அதாவது கிபி 3ம் நூற்றாண்டு தொடங்கி தற்போது வரையுள்ள 741 தமிழ் எழுத்துகள் கொண்டு திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த ஓவியத்தைச் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

இதனைப் பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “"அன்பின் வழியது உயிர்நிலை" என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்!” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓவியர் கணேஷை பாராட்டிப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பல்வேறு தமிழ் அறிஞர்களும், பொதுமக்களும் ஓவியர் கணேஷை பாராட்டி வருகின்றனர்
"அன்பின் வழியது உயிர்நிலை" என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
— M.K.Stalin (@mkstalin) July 21, 2021
வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்! https://t.co/ofy1l9C5Oz

Related Stories
"எங்கள் ஆட்சியில் முதலீடு தானாக வந்தது" எடப்பாடியைக் கிண்டல் செய்த ஸ்டாலின்!
தைவானில் திருவள்ளுவர் சிலை திறப்பு
``தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு நீட் தேர்வே உதாரணம்”
'மாமல்லபுரம் நிகழ்வு மறக்க முடியாதது' - முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு!