“தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை” - நித்யானந்த் ராய்
. இந்தியாவில் ஒரு மாநிலத்தை இரண்டாக பிரிப்பதென்பது கூட்டாட்சி அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது
தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்களான பாரிவேந்தர் மற்றும் ராமலிங்கம் ஆகிய இருவரும் எழுத்துப்பூர்வமாக, "தமிழகம் உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு மாநிலத்தையும் இரண்டாகப் பிரிப்பதற்கு மத்திய அரசுத் திட்டம் வைத்துள்ளதா? எந்தவொரு மாநிலத்தையும் இரண்டாகப் பிரிக்கக் கோரி, மத்திய அரசுக்குத் தனிநபர் அல்லது ஏதேனும் அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் வந்துள்ளனவா? அப்படியிருந்தால், அக்கோரிக்கை எப்போது எழுப்பப்பட்டது என்ற விவரத்தைத் தருக" எனக் கேள்வி மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் நேற்று எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்திருந்தார். அதில் அவர், “புதிய மாநிலங்கள் உருவாக்குவதற்கான கோரிக்கைகள் தனிநபர் மற்றும் அமைப்புகளிடமிருந்து பல்வேறு காலகட்டங்களில் வந்துள்ளன. இந்தியாவில் ஒரு மாநிலத்தை இரண்டாக பிரிப்பதென்பது கூட்டாட்சி அரசியலில் [பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. புதிய மாநிலங்களை உருவாக்கும் விஷயத்தில் எல்லாக் காரணிகளையும் ஆராய்ந்தே மத்திய அரசு முடிவு எடுக்கிறது. தற்போதைய சூழலில் தமிழ்நாடு உட்பட எந்த மாநிலத்தையும் இரண்டாகப் பிரிக்கும் திட்டம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
