யாசகமாகப் பெற்ற பணத்தில் ரூ.4.50 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய முதியவர்!
யாசகமாகப் பெற்ற பணத்தில், 10 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாயாகச் சேமித்து தமிழக முதல்வரின் கொரோனா நிதிக்கு அனுப்பி வைத்து வந்தார். இவரது சேவையைப் பாராட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் சிறந்த சமூக சேவகருக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கியிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நாதன் கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 80). இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். குடும்பத்தினரால் கைவிட்ட இவர், தற்போது மதுரையில் பிழைப்பிற்காக யாசகம் எடுத்து வருகிறார். அதில், கிடைக்கும் பணத்தில் தன் தேவைக்குப் போக மீதி பணத்தை, பல்வேறு ஊர்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
தற்போது கொரோனா பரவி வரும் சூழலில், தான் யாசகமாகப் பெற்ற பணத்தில், 10 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாயாகச் சேமித்து தமிழக முதல்வரின் கொரோனா நிதிக்கு அனுப்பி வைத்து வந்தார். இவரது சேவையைப் பாராட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் சிறந்த சமூக சேவகருக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், தற்போது மேலும் ரூ.10 ஆயிரத்தை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன்மூலம், இதுவரை கொரோனா நிவாரண நிதியாக, ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பியுள்ளதாக பூல்பாண்டி தெரிவித்துள்ளார்.
