”நயன்தாராவுக்கும் எனக்குமான ஆடுபுலி ஆட்டமே ‘நெற்றிக்கண்’ திரைப்படம்” - அஜ்மல்
சைக்கோ வில்லனாக இருந்தாலும், எனது கதாபாத்திரம் தனித்துத் தெரியும். இதுவரை வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களை மிஞ்சும் வகையில் இப்படம் இருக்கும்
கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவள்’. இப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கியிருந்தார். இந்நிலையில், இவர் தற்போது நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப்படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கிறார். பார்வை குறைபாடு இருந்தாலும், ஒரு சைக்கோ கொலையாளியை நயன்தாரா எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. இந்தப்படம் வரும் 13ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அப்படத்தில் சைக்கோ வில்லனாக நடித்திருப்பவர் அஜ்மல்.
இந்நிலையில், இப்படம் குறித்து அவர், ”’கோ’ படத்திற்குப் பிறகு எனக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வந்தன.மருத்துவ படிப்பிற்காக லண்டன் சென்றுவிட்டதால், என்னால் அந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் நல்ல வாய்ப்பாக ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். நயன்தாராவுக்கும் எனக்குமான ஆடுபுலி ஆட்டம்தான் இந்த திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான 'ஜோக்கர்' படக் கதாபாத்திரத்தை ஒத்ததுதான் இப்படத்தில் என்னுடைய பாத்திரம். சைக்கோ வில்லனாக இருந்தாலும், எனது கதாபாத்திரம் தனித்துத் தெரியும். இதுவரை வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களை மிஞ்சும் வகையில் இப்படம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாராவின் 'நெற்றிக்கண்'
விக்னேஷ் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்தாரா!
நெற்றிக்கண்ணில் அம்மாவுக்கு ஜோடி, 39 ஆண்டுகளுக்குப் பிறகு மகளுக்கு ஜோடி! ரஜினிடா..! | #keerthyinThalaivar168
"என் மாமா டைட்டில் எனக்குத்தான்" : தந்திரம் செய்யும் தனுஷ்