சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: பரிசுத்தொகை ரூ.10 லட்சத்தை கொரோனா நிதிக்கு அளிப்பதாக சங்கரய்யா அறிவிப்பு!
, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான தோழர் திரு.என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படுகிறது.மாணவத் தலைவராக, சுதந்திரப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக அரும் பணியாற்றி, தாய்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர் தோழர் என்.சங்கரய்யா. அவருக்கு பத்து இலட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வரும் ஆகஸ்ட 15ம் தேதி சுதந்திர தின விழாவில் அவருக்கு வழங்கப்படும்
தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருது உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொராண்டும் ’தகைசால் தமிழர்’ விருது பெறுபவருக்கு, ரூ.10 லட்சம் பணமும், பாராட்டு சான்றிதழும் சுதந்திரத் தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதுக்கான நபரைத் தேர்வு செய்வதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதன் முடிவில், தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டிருந்த 'தகைசால் தமிழர்' விருது முதுபெரும் இடதுசாரி தலைவரான என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான தோழர் திரு.என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படுகிறது.மாணவத் தலைவராக, சுதந்திரப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக அரும் பணியாற்றி, தாய்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர் தோழர் என்.சங்கரய்யா. அவருக்கு பத்து இலட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வரும் ஆகஸ்ட 15ம் தேதி சுதந்திர தின விழாவில் அவருக்கு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு தோழர் என்.சங்கரய்யா ஒரு அறிக்கை வெளியிட்டார், அதில், ”தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள 'தகைசால் தமிழர்' விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.எனது சேவையைப் பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த விருதுக்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கோவிட் 19 பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் - 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழக மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன், சுரண்டலற்ற பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியைத் தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழினத்துக்கும் மனிதசமூகத்துக்கும் அரும்பணியாற்றி அகவை நூறு எட்டியிருக்கும் முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா அவர்களுக்கு முதல் 'தகைசால் தமிழர்' விருதை வழங்குவதில் தமிழ்நாடு அரசு பெருமைகொள்கிறது.
— M.K.Stalin (@mkstalin) July 28, 2021
விருதுத்தொகையையும் #TNCMPRF-க்கு வழங்கி உயர்ந்து நிற்கும் தோழருக்கு என் வணக்கங்கள்! pic.twitter.com/BrdCPPi0rs
