டெஸ்டோஸ்டிரோன் ஊசி என்பது டெஸ்டோஸ்டிரோன் மாற்றுச் சிகிச்சையின் வழிமுறைகளில் ஒன்றாகும். அவை பொதுவாக ஒரு மருத்துவரால் வழங்கப்படுகின்றன. மற்ற முறைகளை விடவும் இவை குறைவாகவே வழங்கப்படுகின்றன.
டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலினத்திலும் சுரக்கிறது. இந்த ஹார்மோன் பருவமடைதல் மற்றும் கருவுறுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களில், டெஸ்டோஸ்டிரோன் டெஸ்ட்டிஸ்களிலும் பெண்களில், டெஸ்டோஸ்டிரோன் கருப்பையிலும் சுரக்கின்றது. இது பாலியல் ஆசையை பாதிக்கிறது.
டெஸ்டோஸ்டிரோன் பெண்களுக்கு அதிக அளவு சுரக்கும் போது, ஹார்மோன் குறைபாடு, மாதவிடாய் கோளாறு, கருவுறுதலில் பிரச்னை போன்ற உபாதைகள் தோன்றும். பெண்களை விட ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அதிக அளவு சுரக்கிறது. ஆண் பண்புகளாக கருதப்படும் பல குணாதிசயங்களின் வளர்ச்சியை டெஸ்டோஸ்டிரோன் பெரிதும் பாதிக்கிறது என்று கருதப்படுகிறது. இது தசை வளர்ச்சி, எலும்பு உறுதி, உடல் வலிமை மற்றும் உடல் முடியின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
உடலின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஆண்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோனின் அளவு தொடர்ந்து மாறுகிறது. குறிப்பாக 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இந்த அளவுகள் மிகக் குறைவாகி, தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
குறைந்த டெஸ்டோஸ்டிரோனின் அறிகுறிகள்:
உடலுறவில் குறைவான விருப்பம் (லிபிடோ)
விறைப்புத்தன்மை
சோர்வு மற்றும் மோசமான ஆற்றல் நிலை
உடல் மற்றும் முக முடி உதிர்தல்
கவனம் சிதறல்
மன அழுத்தம்
மார்பக திசுக்களின் வளர்ச்சி
குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவிற்கான காரணங்கள்
பருவமடைதல் தாமதமானது
டெஸ்டிகுலர் சேதம் (அதிர்ச்சி, குடிப்பழக்கம் அல்லது புழுக்கள்/கிருமிகளால் ஏற்படுகிறது)
ஹைபோதாலமிக் நோய்
பிட்யூட்டரி நோய்
புற்றுநோயற்ற பிட்யூட்டரி கட்டி
டெஸ்டோஸ்டிரோன் மாற்றுச் சிகிச்சை
குறைந்த அளவிலான டெஸ்டோஸ்டிரோன் உள்ளவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சை உதவுகிறது.
இந்த சிகிச்சைக்கு, டெஸ்டோஸ்டிரோன் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. உடலின் ஒட்டுமொத்த டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க மாத்திரைகள், க்ரீம்கள், ஜெல், உடலில் செலுத்தப்படும் திரவம் ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது.இவை குறைந்த டெஸ்டோஸ்டிரோனின் சில அறிகுறிகளை அகற்ற அல்லது குறைக்க உதவுகிறது.
டெஸ்டோஸ்டிரோன் ஊசி என்பது டெஸ்டோஸ்டிரோன் மாற்றுச் சிகிச்சையின் வழிமுறைகளில் ஒன்றாகும். அவை பொதுவாக ஒரு மருத்துவரால் வழங்கப்படுகின்றன. மற்ற முறைகளை விடவும் இவை குறைவாகவே வழங்கப்படுகின்றன.
டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சையால் வரும் பக்க விளைவுகள்
டெஸ்டோஸ்டிரோன் மாற்றுச் சிகிச்சை செய்பவர்கள், அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து டெஸ்டோஸ்டிரோன் அளவை சரிபார்ப்பது அவசியமாகும். சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் அரிதாக, இரத்த உறைவு ஆகியவை அடங்கும். முகப்பரு மற்றும் மார்பக விரிவாக்கத்தாலும் பாதிக்கப்படலாம்.
டெஸ்டோஸ்டிரோன் உணவு
துத்தநாகம், வைட்டமின் –டி நிறைந்த உணவுகள் டெஸ்டோஸ்டிரோன் அளவை தக்கவைத்துக் கொள்ள உதவும். டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கப் பூண்டு ஒரு சிறந்த உணவு என ஆய்வுகள் கூறுகிறது.
