மின்வெட்டைத் தடுக்க 'LED பல்புகளை அரசு இலவசமாக வழங்கலாம்!'| மக்கள் செய்ய வேண்டியவை?
'வீட்டில் மேல்மட்டத் தொட்டிக்கு(over tank) பயன்படுத்தும் பழைய தண்ணீர் மோட்டார்களை மாற்றுவது சிறந்தது. பழைய மோட்டார் 1HP செய்யும் வேலையை புதிய மோட்டார்கள் 0.5HP Enery Efficiencyல் செய்யும்' மின் சேமிப்பு குறித்த ஆலோசனை
பெரும்பாலானோருக்கு Work from home... இவ்வேளையில் மின்வெட்டா?. என்று பல நேரங்களில் வீட்டிலிருந்து அலுவலக பணி செய்பவர்கள், வீட்டில் மின் உபயோக பயன்படுத்துபவர்களுக்குத் தோன்றலாம். 'இதுபோன்ற நிலைக்குக் காரணம் திமுக அரசுதான். கடந்த ஆட்சியின் போதும் இதே தான் செய்தார்கள். தற்போதும் அதையே செய்கின்றனர் என்பது போன்ற விமர்சனங்கள் எழத் துவங்கிவிட்டது'.
அதிமுக தரப்பில் பல இடங்களில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், மின் தடை ஏற்படுகிறது. தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மின்சார வாரியத்துக்கு ரூ. 1,33,671 கோடி கடன் உள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொள்முதல் விவகாரங்கள் தொடர்பாகச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல. நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால் தான் அது மின் மிகை மாநிலம்” என்று தெரிவித்திருந்தார்.
முன்னாள் மின்வாரியத் துறை அமைச்சர் தங்கமணி, “4000 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் கிடைக்கும்போது மின்தடை ஏற்படக் காரணம் என்ன? 10 நாளில் மின்தடை சரி செய்யப்படும் எனக்கூறிய அமைச்சர் மே 7-ம் தேதியிலிருந்து என்ன செய்து கொண்டிருந்தார்? சென்னையில் புதைவட்டம் மூலம் மின் விநியோகம் செய்யப்படும் நிலையில் மின்தடை ஏற்படக் காரணம் என்ன?.

தமிழகத்தில் மே மாதம் 2-ம் தேதி வரை மின்சார விநியோகம் சீராக நடைபெற்று வந்தது. அப்போது தமிழகத்தில் மின் தேவை 17,121 மெகா வாட்டாக இருந்தது.
மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 3,300 மெகா வாட் பெறப்பட்டது. மீத மின்சாரத்தைத் தமிழகத்திலேயே உற்பத்தி செய்தோம். தற்போது மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மின் தேவை குறைந்துள்ளது. தமிழகத்தில் 14,500 மெகா வாட் மின் தேவை மட்டுமே இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இவ்வாறு, கடந்த ஆட்சியின் மீது அரசு பழிபோடுவதும், தற்போதைய அரசின் மீது முன்னாள் ஆட்சியாளர்கள் பழிபோடுவதும் புதிதல்ல. எதார்த்தத்தில் மின்வெட்டு என்பது இருக்கிறது என்றே பலரும் தங்கள் உள்ள குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. மின்துறை நஷ்டத்தில் இயங்க இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் விலையில்லா மின்சாரமான 100 யூனிட்டை தவிர அதற்கு மேல் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் நாம் எவ்வாறு பணம் செலுத்துகிறோம்? என்றால், 101வது யூனிட்டிலிருந்து 200 யூனிட்கள் 100*1.5 =150ரூ. நிலையான கட்டணம் ரூ. 20. மொத்தமாக 170 ரூபாய் கூடுதல் கட்டணமாக இருக்கும்.
ஒரு நபர் இரு மாதங்கள் 380 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட்டுக்கு கட்டணம் கிடையாது. 101வது யூனிட்டிலிருந்து 200 வது யூனிட்டுவரை 100*2 =200ரூ.
201வது யூனிட்டிலிருந்து 500வது யூனிட் வரை ரூ 3 (ஒரு யூனிட்டுக்கு). 501வது யூனிட்டிலிருந்து 510வது யூனிட்வரை ரூ. 6.60 என்று கணக்கிடப்படுகிறது.
இவற்றுடன் நிலையான கட்டணம் சேர்க்கப்படும்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சேர்த்து 100 யூனிட்டுகள் வரை இலவசமும், அதற்கு மேல் பயன்பாட்டைப் பொறுத்து கட்டணத் தொகை மாறுபடும்.
தமிழ்நாட்டில் 2,12,00,000 வீடுகளில் மின் வசதி உள்ளதாக, கடந்த ஆண்டில் தொடரப்பட்ட வழக்குக்குத் தமிழக மின்வாரியம் பதில் அளித்திருந்தது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் மூன்றில், ஒரு பகுதியினர் மட்டுமே அதிக அளவு மின்சாரம் பயன்படுத்துவோராக உள்ளனர். அதாவது ஏசி, குளிசாதனபெட்டி, வாஷிங்மெஷின் போன்ற பொருட்களை முழுவதும் பயன்படுத்தி மின்சாரம் செலவு செய்பவர்கள்.
இவ்வாறு இருக்க ஏன் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். தமிழ்நாட்டில் பெரும்பலனோர் வீட்டிலிருந்து பணியற்றி வருகின்றனர். அதேபோல் பள்ளி குழந்தைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். எனவே மின் தேவை என்பது குடியிருப்புகளில் அதிகரித்துள்ளது.
வெயில் காலங்களில், ட்ரான்ஸ்ஃபார்மர்கள் அடிக்கடி பழுதாகிறது. அதை உடனடியாக சரி செய்தாலும் மறுநாளே மீண்டும் அதே நிலையை நாம் பார்க்க முடிகிறது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி தமிழ்நாட்டில் 14,500 மெகா வாட் மின்சாரமே தேவைப்படுகிறது என்று கூறியிருந்தார். ஆனால் அதைவிடத் தேவை அதிகமாக இருப்பதாக விகடனில் குறிப்பிடப்பட்ட கட்டுரையின் மூலம் தெரியவருகிறது. அதாவது சாதாரண நாட்களில் 16,500 மொகாவாட் மின் தேவையும், கோடைக்காலத்தில் 17,500 முதல் 18,000 மொகாவாட் மின் தேவையும் இருக்கிறது.
2017-ம் ஆண்டில் அரசின் தளத்தில் வெளியிடப்பட்ட தகவல் அடிப்படையில், தமிழகத்தில் 18,732.78மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அதை விட அதிகமான திறன் கொண்டிருந்தாலும், பல காரணங்களால் 15,000 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்ய முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் இதில் எந்த அளவுக்குப் பங்கு வகிக்கின்றனர்?
தமிழ்நாட்டில் நஷ்டமோ!, இலாபமோ! ஒவ்வொன்றிலும் மக்களின் செயல்பாடு என்பது முக்கியமானது. மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் விதம், தேவை என்று பல அடிப்படைகளைக் கொண்டு Geeyes Control என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பாலு என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் சில தகவல்கள் பகிர்ந்துள்ளார். அதில், “இந்தியாவில் உள்ள மின் வாரியங்களிலேயே நல்லமுறையில், உயரிய பாதுகாப்போடு இருப்பது நமது தமிழ்நாடு மின்சார வாரியம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெருமையும் கொள்ள வேண்டும். ஆனால் நம்முடைய தமிழ்நாடு மின்சார வாரியம் பல வருடங்களாக நட்டத்தில் தான் இயங்குகிறது.
அதற்கான காரணங்கள் என்ன என நாம் தேடும்போது, அதை 'மின் இழப்பு'(Power Loss) எனச் சொல்வார்கள். அதற்குக் காரணங்கள் பல இருக்கின்றன. முதல் காரணம் நம்மிடம் இருக்கும் பழைய மின்மாற்றிகள் (Transformers). பழைய மின்மாற்றிகளில் மின் இழப்பு அதிகமாக இருக்கும்.
ஒரு சின்ன உதாரணம் நமது வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு ட்ரான்ஸ்பார்மரை எடுத்துக் கொள்வோம். அதன் கெபாசிட்டி 500 KVA இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு இன்புட் (primary) வோல்டேஜ் 11000KV அல்லது 22000KV கொடுக்கப்படுகிறது. அதில் இருந்து அவுட்புட் (secondary) 440 Volt'களாக பிரித்து மக்கள் உபயோகத்துக்கு கொடுப்பார்கள். அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மும்முனை இணைப்பும் (3 phase supply), ஒரு நியூட்ரல் வொயரும் போகும். வீட்டு உபயோகத்திற்கு ஒருமுனை இணைப்பு (single phase) மற்றும் விவசாய/தொழில் நிறுவனங்களுக்கு மும்முனை(3 phase) இணைப்பும் கொடுப்பார்கள். மும்முனை (3phase) இணைப்பு கொடுத்தால் அதில் கட்டயமாக ஒரு மின்தேக்கி(capacitor) இணைக்க வேண்டியிருக்கும்.
நம் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, ட்யூப்லைட், டீவி போன்ற சாதனங்களுக்கான connecting load 1500Watts-க்குள் வரும். மேற்சொன்ன சாதனங்கள் எல்லாமே ON'ல இருக்கும் போது, தண்ணீர் மோட்டாரையும் ON செய்துவிடுகின்றனர். எனவே தண்ணீர் மோட்டாரும் அதற்கான வேகத்தில் (RPM) ஓடாது. Voltage குறைவாக இருக்கும்போது மோட்டார் ஓடினால் யூனிட் பயன்பாடு அதிகமாகும். தண்ணி மோட்டார் ஓட்டும்போது, ஏதாவது ஒரு லோடை OFF செய்து வைக்க வேண்டும். இல்லை என்றால் மின் தேவை அதிகரிக்கும்.
கிராமப்புறங்கள் அதிகம் பயன்படுத்தப்படும் குண்டு பல்புகள் மிக அதிகளவு மின்சாரத்தை உறிஞ்சும். எனவே குண்டு பல்புகள், டியூப் லைட்டுகளுக்கு பதிலா #LED பல்புகள் பயன்படுத்தலாம். இப்ப மார்கெட்ல கிடைக்கற #LED பல்புகள் குறைந்த மின்சாரத்தை எடுத்துட்டு அதிக வெளிச்சம் கொடுக்கும் திறனுடையதாக இருக்கும். அது மாதிரி பல்புகள் பயன்படுதுவதால் 40% வரை மின்சாரத்தை சேமிக்கலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்களின் ஒத்துழைப்போடு நம்முடைய அரசாங்கம் எப்படி நவீன மயமாக்கலாம் என, 30 ஆண்டுகால மின்துறை சார்ந்து இயங்கும் #Geeyes_Control எனும் நிறுவனத்தை நடத்தி வரும் மின் பொறியாளன் என்கிற முறையில் சில யோசனைகள் இங்கே ஒரு #திரட்டாக பதிவு செய்து இருக்கேன்..???????????? pic.twitter.com/4owxe1z5Dr
— Balu | பாலு (@balu_gs) June 18, 2021
Energy Efdiciency மோட்டார் இணைக்கப்பட்ட ஃபேன்கள் பயன்படுத்தும் போது 35% வரை மின்சாரத்தை மிச்சப்படுதலாம்.அதன் விலையும் சாதாரண ஃபேன்களை விட 1500-2000 அதிகமாக இருக்கும் ஆனால் இது சேமிக்கும் மின்சாரத்துக்கான பணத்தை கணக்கிடும்போது, இந்தத் தொகை ஒன்றுமே இல்லை.
வீட்டில் மேல்மட்டத் தொட்டிக்கு(over tank) பயன்படுத்தும் பழைய தண்ணீர் மோட்டார்களை மாற்றுவது சிறந்தது. பழைய மோட்டார் 1HP செய்யும் வேலையை புதிய மோட்டார்கள் 0.5HP Enery Efficiencyல் செய்யும்.
மற்றொரு விஷயம், LED பல்புகள் மற்றும் ஒரு Energy Efficient சீலிங் ஃபேன் போன்றவை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு இலவசமாக வழங்கலாம். அப்படி வழங்கும்போது, அரசு தற்போது இலவசமாக வழங்கும் 100 யூனிட் மின்சாரத்திலும் மிச்சம் பண்ணலாம். ” என்று நீண்ட விளக்கத்தை எழுதியுள்ளார்.
இதே கருத்தை வேறு சிலரிடம் விசாரிக்கையில், அவர்களும் குறிப்பிட்டனர்.
