அதிக கொரோனா மருத்துவக் கழிவுகள் வெளியேற்றம்: தமிழ்நாடு 3வது இடம்!
’இந்தியாவிலேயே அதிகமாகக் கேரளாவில், 6442.2 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் உருவாகியுள்ளன, இரண்டாவது மாநிலமாகக் குஜராத் மாநிலத்தில் 5004.9 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் உருவாகியுள்ளன. மூன்றாவது மாநிலமாக தமிழகத்தில், 4,835.9 டன் மருத்துவ கழிவுகள் உருவாகியுள்ளன’
இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில், ‘இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்த கால கட்டங்களிலிருந்து, மருத்துவ கழிவுகள் அளவு அதிகரித்து உள்ளதா? அப்படியானால் மாநில வாரியாக அதன் விவரம் என்ன’ என, மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், தினசரி மருத்துவ கழிவுகள் 2017-18 ஆம் ஆண்டு காலகட்டங்களில் 531 டன் ஆக இருந்தது. 2018-19ம் ஆண்டு காலகட்டத்தில் தினசரி மருத்துவ கழிவுகள், 608 டன் ஆக இருந்தது. இவை, 2019-20ம் ஆண்டு காலகட்டங்களில் 615 டன் ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2020 ஜூன் முதல் 2021 ஜூன் மாதம் வரை 56,898.14 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் உருவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ’இந்தியாவிலேயே அதிகமாகக் கேரளாவில், 6442.2 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் உருவாகியுள்ளன, இரண்டாவது மாநிலமாகக் குஜராத் மாநிலத்தில் 5004.9 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் உருவாகியுள்ளன. மூன்றாவது மாநிலமாக தமிழகத்தில், 4,835.9 டன் மருத்துவ கழிவுகள் உருவாகியுள்ளன’ என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2020 -21 காலகட்டத்தில் உருவான கொரோனா அல்லாத மருத்துவ கழிவுகள் 58.3 டன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
