“சூர்யக்குமார் யாதவ்வின் பேட்டிங் அபாரமாக இருந்தது” - தவான்
ன். புவனேஷ்வர் குமாரி பந்துவீச்சு அபாரமாக இருந்தது. வருண் தனது முதல் ஆடத்திலேயே அபாரமாக பந்து வீசினார். சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. பிரித்வி ஷா அடுத்த ஆட்டத்தில் பார்ம்க்கு திரும்புவார்”
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இலப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 18.3 ஓவர்களில், 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் நன்றாக பேட் செய்த சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் குவித்தார். பவுலிங்கில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய கேப்டன் ஷிகர் தவான், “முதலில் 10-15ரன்கள் குறைவாக எடுத்ததாக நினைத்தேன். ஆடுகளைத்தின் தன்மையை பார்த்த பிறகு இது நல்ல ஸ்கோர் என்பதை உணர்ந்தேன். புவனேஷ்வர் குமாரி பந்துவீச்சு அபாரமாக இருந்தது. வருண் தனது முதல் ஆடத்திலேயே அபாரமாக பந்து வீசினார். சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. பிரித்வி ஷா அடுத்த ஆட்டத்தில் பார்ம்க்கு திரும்புவார்” எனத் தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் இடையிலான அடுத்த டி20 போட்டி கொழும்புவில் நாளை நடைபெறுகிறது.
