மூக்கால் சூர்யாவின் ஓவியத்தை வரைந்த ரசிகர்: பாராட்டிய சூர்யா!
கேரளாவைச் சேர்ந்த இந்திரஜித் ஜாவ் என்கிற சூர்யா ரசிகர் ஒருவர், சூர்யாவின் உருவத்தைத் தனது மூக்கைக் கொண்டு சுவரில் வரைந்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக அமேசான் பிரைமில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது நடிப்பில் அடுத்ததாக, ‘வாடிவாசல்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ’ஜெய்பீம்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில், சூர்யாவின் 46வது பிறந்தநாள் கடந்த ஜூலை 23ம் தேதி அவரது ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவரது ரசிகர்கள், சூர்யாவின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்தனர். குறிப்பாகக் கேரளாவைச் சேர்ந்த இந்திரஜித் ஜாவ் என்கிற சூர்யா ரசிகர் ஒருவர், சூர்யாவின் உருவத்தைத் தனது மூக்கைக் கொண்டு சுவரில் வரைந்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவை இயக்குநர் ராஜசேகர் பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யா, தனது புகைப்படத்தைத் தத்ரூபமாக வரைந்த தனது ரசிகரின் அந்த வீடியோவை ரீட்வீட் செய்து நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.
This is mind blowing!!! #indrajith_dav https://t.co/w6cpyFZ8DX
— Suriya Sivakumar (@Suriya_offl) July 25, 2021
