தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த வியாபாரி - எஸ்எஸ்ஐ கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி சோதனைச் சாவடியில் முருகேசன் என்பவரைத் தாக்கிய விவகாரத்தில் (தாக்கப்பட்டவர் இறந்ததால்) சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இடையப்பட்டியில் மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக்குறிச்சிக்குச் சென்று மது அருந்திவிட்டு திரும்பி வரும் போது இடையப்பட்டி சோதனைச் சாவடியில் போலீஸார் அவர்களை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது முருகேசனுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் முருகேசனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முருகேசன் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.
