8 பேர் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் - தனி ஆளாக இலங்கையை காப்பாற்றிய கேப்டன்
இங்கிலாந்து அணிக்கு 186 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பதம் நிஷன்கா 5 ரன்னில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் குசல் பெரரா 73 ரன்கள் அடித்தார்.
குசல் பெரராவைத் தவிர வனிந்து ஹசரங்கா மட்டுமே சிறப்பாக விளையாடி 54 ரன்கள் அடித்தார். மற்ற இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இலங்கை அணியில் 8 பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பதம் நிஷன்கா - 5, சரித் அசலங்கா - 0, தசுன் சனகா - 1, தனஞ்ஜெயா லக்ஷன் - 2, ரமேஷ் மெண்டிஸ் - 1, பினுரா ஃபெர்னாண்டோ - 2, துஷ்மந்தா சமீரா - 7, பிரவீன் ஜெயவிக்ரம - 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்
இறுதியில் இங்கிலாந்து அணி 42.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே அடித்தது.
ALL OUT ☝️
— ICC (@ICC) June 29, 2021
Sri Lanka have been bowled out for 185!
Chris Woakes finishes with figures of 4/18 ????#ENGvSL | https://t.co/zb9rXOpndi pic.twitter.com/oKJ7CK7ifJ
இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Related Stories
ஒரே போட்டியில் 4 சதங்கள்; ஆனால் மொத்த ரன்களே 345 தான் - அது எப்படி?
‘அதிரடி காட்டிய கிறிஸ் கெயில்’ 8 ஆவது இடத்தில் இருந்து 4 ஆவது இடத்தை பிடித்த பஞ்சாப் அணி!
‘தவான், கோலி, கே.எல்.ராகுல், கிருணால் பாண்டியா ஆகியோர் அரை சதம்’ 317 ரன்கள் அடித்த இந்தியா
‘8 ஆவதாக இறங்கி 74 ரன்கள் அடித்த வணிந்து ஹசரங்கா, இருந்தும் வீண்’ இலங்கையை தோற்கடிந்த பங்களாதேஷ்