கடைசி டி20யில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 2வது டி20 போட்டியில் தோற்றது. குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து, அவருடன் தொடர்பிலிருந்ததாக முன்னணி வீரர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால், அனுபவமற்ற இந்திய அணியே களமிறங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 14.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் மட்டுமே இளந்து, இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம், இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. 4ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் கைப்பற்றிய ஹசரங்கா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TeamIndia fought hard but Sri Lanka win the T20I series decider by 7 wickets to clinch the series 2-1.
— BCCI (@BCCI) July 29, 2021
Scorecard ???? https://t.co/E8MEONwPlh #SLVIND pic.twitter.com/EvAdXKH080

Related Stories
அட்டகாசமாக பந்துவீசிய நவ்தீப் சைனி, பும்ரா - தொடரை வென்றது இந்திய அணி
லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஜோடியால் தப்பித்த இந்திய அணி - இலங்கைக்கு 202 ரன்கள் இலக்கு
INDvSL 3rd T 20 - மழை வருமா? புது அணியில் இவர்களா?
ஸ்ரேயாஸ் அய்யர் அடித்த மெகா சிக்ஸர்... விராட் கோலியின் சூப்பர் ரியாக்ஷன்