தமிழ்മലയാളംहिंदी
தொழில்நுட்பம்
வேவு பார்த்ததா இந்திய அரசு? விளக்கம் கேட்கும் சுப்பிரமணிய சுவாமி
இஸ்ரேல் வழங்கிய Pegasus என்ற வேவு தளம் மூலம் கண்காணிக்கப்பட்டதாகச் செய்தி வெளியாகியிருந்தது.
THE WIRE உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த பலரது செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கக்கூடும் எனத் தகவல் வெளியானது.செல்போன் ஹேக் குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்க வேண்டும் எனச் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
நேற்று இரவு வெளியான இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மே.17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன்காந்தி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் அலைபேசி உரையாடல்கள் இஸ்ரேல் வழங்கிய Pegasus என்ற வேவு தளம் மூலம் கண்காணிக்கப்பட்டதாகச் செய்தி வெளியாகியிருந்தது.
இதற்கு மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், பாஜகவை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பலரும் விளக்கம் கேட்டு வருகின்றனர்.
