சவப்பெட்டிக்குள் உயிருடன் படுக்கும் தென்கொரிய மக்கள்! அதிர வைக்கும் காரணம்!
'இலவச கல்லறை'-க்கு உயிர் வாழும் மக்கள் மட்டுமே செல்ல முடியும். அங்கே செல்லும் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக சவப்பெட்டி ஒன்று வழங்கப்படுகிறது.
”அனைவருக்கும் மரணம் என்பது உறுதி..... மரணத்திற்குப் பிறகு நாம் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை..... இருக்கும் வரை யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் சந்தோஷமாக இரு” என்று பல தத்துவங்களை நாம் வாய் வார்த்தையாகக் கூறினாலும் உண்மையில் மரணத்தின் விளம்பு வரை சென்றுவிட்டு வந்தால் மட்டுமே வாழ்க்கையின் அருமை புரியும். இதை நிரூபிக்கும் வகையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாகத் தென் கொரியாவில் உள்ள இலவச கல்லறையைத் தேடி 25,000க்கும் அதிகமானோர் சென்று வந்துள்ளனர். தொடர்ந்து செல்கின்றனர்.
'இலவச கல்லறை'-க்கு உயிருடன் இருப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும். அங்கே செல்லும் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக சவப்பெட்டி ஒன்று வழங்கப்படுகிறது. ஆடம்பர ஆடை, அலங்காரம் எதுவுமின்றி அங்கே வழங்கப்படும் ஒரு மஞ்சள் ஆடையை அணிந்து கொண்டு சவப்பெட்டியில் 10 நிமிடங்கள் வரை கண்களை மூடி படுக்க வேண்டும். அப்போது, இந்த உலகத்தை விட்டு அவர்கள் நீங்கிவிட்டதாக முழுமையாக மரணத்தை உணர வேண்டும். இதில் பங்கெடுத்துக்கொள்ள பதின்ம வயதைச் சார்ந்தவர்களும் ஆர்வம் காட்டுகிறார்களாம்.
“மரணம் எப்படியிருக்கும் என்னும் உணர்வை நீங்கள் அறிந்துவிட்டால், அனுபவித்து விட்டால், வாழ்க்கையின் மகத்துவம் உங்களுக்குப் புரிந்துவிடும்.” என்கிறார் 75 வயதையுடைய சோ-ஜேஹீ என்னும் முதியவர். ‘பார்ப்பவர்கள் அனைவரையும் என்னுடைய போட்டியாளராக நான் கருதினேன். தற்போது இந்த சவப்பெட்டிக்குள் சென்று வந்ததும், அதனால் என்ன பயன் என்பதை புரிந்துகொண்டேன்’ என்று 28 வயதான சோய் ஜின் –க்யூ கூறுகிறார்.
”இந்த இலவச கல்லறையின் முக்கியமான நோக்கம் வாழ்க்கை என்பது ஒரு வரம் என்பதை புரிந்துகொள்ளவும், சரியான நேரத்தில் மன்னிப்பு கேட்கவும், மன்னிப்பு வழங்கவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணக்கமாக வாழவும் பயன்படுகிறது” என்று கூறுகிறார் இந்த கல்லறையின் உரிமையாளர் ஹைவோன்.

Related Stories
பிக்பாஸ் சீசன்3 - முதல் எபிசோடில் தெறிக்கவிடப்பட்ட கமலின் அரசியல் பன்ச்கள்!
"குழியில் இருந்து வாடை வருகிறது" பதறிய ராதாகிருஷ்ணன்: சடலமாக மீட்கப்பட்ட சுஜித்!
ரூ.337 கரோனா ரேபிட் கிட்-ஐ ரூ.600க்கு வாங்கிய தமிழகம்! மரண பீதியிலும் 78% கூடுதல் விலை! ரூ.1.47 கோடி யாருக்கு லாபம்?