VIDEO | சும்பன் கில்லின் சூப்பர்மேன் கேட்ச், கைல் ஜேமீசன் அசுர சிக்ஸர் - WTC21 Final ஒரு பார்வை
நியூசிலாந்தின் பிஜே வால்டிங் விக்கெட்டை எடுத்த ஷமி, ராஸ் டெய்லர் அடித்த பந்தை பாய்ந்து கேட்ச் பிடித்த சுப்மன் கில், ஷமி பந்தில் சிக்ஸரை பறக்கவிட்ட கெயில் ஜேமிசன் ஆகியவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளது ஐசிசி.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியின் கடைசி நாள் இன்று. முதல் இன்னிங்ஸில் 217 ரன்களை அடித்தது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்கள் அடித்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 249 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 54 ரன்கள் அடித்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை அடித்தது இந்திய அணி. ரோஹித் சர்மா 30 ரன்னிலும், சுப்மன் கில் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி நாளான இன்று 32 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணியில் புஜாரா மற்றும் விராட் கோலி இன்னும் சில மணி நேரங்களில் களமிறங்க உள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்தின் பிஜே வால்டிங் விக்கெட்டை எடுத்த ஷமி, ராஸ் டெய்லர் அடித்த பந்தை பாய்ந்து கேட்ச் பிடித்த சுப்மன் கில், ஷமி பந்தில் சிக்ஸரை பறக்கவிட்ட கெயில் ஜேமிசன் ஆகியவற்றை வீடியோவாக வெளியிட்டுள்ளது ஐசிசி.
???? Gill’s stunning catch
— ICC (@ICC) June 22, 2021
???? Shami’s wicket of Watling
???? Jamieson’s monster six
Vote for your @Nissan #POTD of Day 5 ????️ https://t.co/pJMuJQS77u#WTC21 Final | #INDvNZ pic.twitter.com/QT2rf76Wnt
