தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
ஆபாசப் பட விவகாரம்! ஷில்பா ஷெட்டியின் கணவர் லண்டனில் வீடியோக்களை வெளியிட்டதாக தகவல்...
திரைத்துறையில் நடிக்க வாய்ப்பளிப்பதாகக் கூறி, ஆபாசப் படங்களில் நடிக்க வற்புறுத்தியதாக சில பெண்கள் ராஜ் குந்த்ரா மீது புகார் தெரிவித்திருந்தனர்.
ஆபாசப் படம் எடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா 45 ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் ஆபாசப் படங்களை வெளியிடும் செயலியை நடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திரைத்துறையில் நடிக்க வாய்ப்பளிப்பதாகக் கூறி, ஆபாசப் படங்களில் நடிக்க வற்புறுத்தியதாக சில பெண்கள் ராஜ் குந்த்ரா மீது புகார் தெரிவித்திருந்தனர். இதன் பெயரில் அவர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் தரவில், “லண்டனைச் சேர்ந்த கென்ரின் என்ற நிறுவனத்திற்கு ஹாட்ஷாட்ஸ் என்ற ஆபாசப் படங்களை வெளியிடும் செயலி உள்ளது. இது ராஜ் குந்த்ராவின் உறவினருக்கு சொந்தமான நிறுவனம். இதற்காக நம் நாட்டில் பல இடங்களில் படமெடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.
