விஜய் பற்றி 2 வார்த்தைகளில் தெறிக்கவிட்ட ஷாருக்கான்
நடிகர் விஜய்யை ‘Very Cool’ என்று கூறியுள்ளார் நடிகர் ஷாருக்கான்.
பாலிவுட்டில் இன்று ஷாருக்கானுக்கு 29 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ரசிகர்கள் இந்த மைல்கல்லை நேற்று முதல் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஷாருக்கான் அடுத்ததாக இயக்குனர் சித்தார்த் ஆனந்தின் ‘பதான்’படத்தில் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள யாஷ் ராஜ் பிலிம் ஸ்டுடியோவில் இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
பதான் படப்பிடிப்பில் முதலாவதாக ஷாருக்கான் இணைந்துள்ளார். 15 முதல் 18 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜான் ஆப்ரகாம் மற்றும் தீபிகா படுகோனே இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள். பெரிய அதிரடி சண்டைக் காட்சிகளை படமாக்க குழு வெளிநாடுகளுக்குச் செல்ல இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் இன்று டிவிட்டரில் ரசிகர்களுடன் கேள்வி பதில் அமர்வில் கலந்துகொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய்யின் பீல்ட் பட புகைப்படத்தை பகிர்ந்து விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்.
இந்த கேள்விக்கு நடிகர் ஷாருக்கான் ‘Very Cool’ என்று பதிலளித்துள்ளார்.
Very cool https://t.co/bFjbEgmeij
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2021
இதேபோல் உங்களுடைய அடுத்தப்பட வெளியீட்டை பற்றி ரசிகர் கேட்டதற்கு, ‘தற்போதைய சூழ்நிலையில் கொஞ்சம் பொறுமையுடன் திரைப்பட வெளியீட்டை பற்றி யோசிப்பது சரியாக இருக்கும்” என்று பதிலளித்துள்ளார்.
மேலும் ஊரடங்கு காலத்தில் படிக்க சில புத்தகங்களை பரிந்துரையுங்கள் என்று கேட்டதற்கு, “ஹாரி பாட்டர்” என்று பதிலளித்துள்ளார்.
