ஒருநாள், டி 20, டெஸ்ட் மூன்றிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஷபாலி வர்மா
இந்திய பெண்கள் அணியில் 3 விதமாக சர்வதேச போட்டிகளிலும் குறைந்த வயதில் அறிமுகமானவர் என்ற சாதனையை படைத்தார் ஷபாலி வர்மா.
இந்தியா - இங்கிலாந்து பென்கள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் முறையே 10 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஷபாலி வர்மாவுக்கு இது அறிமுக ஒருநாள் போட்டியாகும், ஆனால் முதல் போட்டி அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.
ஷபாலி வர்மா வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இந்திய பெண்கள் அணியில் ஒருநாள் போட்டியில் குறைந்த வயதில் அறிமுகமானவர் என்ற சாதனையை படைத்தார். இன்றைய போட்டியின் மூலம் ஷபாலி வர்மா அறிமுகமாகும் போது அவருக்கு வயது 17 (17 வருடம், 150 நாட்கள்).
இதுமட்டுமல்ல டி20 மற்றும் டெஸ்டிலும் இந்திய பெண்கள் அணியில் குறைந்த வயதில் அறிமுகமான வீராங்கனை இவர்தான்.
1) இந்திய பெண்கள் அணியில் குறைந்த வயதில் டி 20 இல் அறிமுகம் - ஷபாலி வர்மா (15 வருடம், 239 நாட்கள்)
2) இந்திய பெண்கள் அணியில் குறைந்த வயதில் டெஸ்ட்டில் அறிமுகம் - ஷபாலி வர்மா (17 வருடம், 139 நாட்கள்)
3) இந்திய பெண்கள் அணியில் குறைந்த வயதில் ஒரு நாள் போட்டியில் அறிமுகம் - ஷபாலி வர்மா (17 வருடம், 150 நாட்கள்)
Shafali Verma, the youngest to play in all formats for India ???????? pic.twitter.com/5FEKt3UEaf
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 27, 2021
