கரோனா 2ஆவது அலை இன்னும் முடியவில்லை, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்
கோவிட் தடுப்பூசி மூலம் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றியைப் பெறுவோம் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர், 907 பேர் இறந்துள்ளனர் மற்றும் 56,994 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் தற்போது பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5,52,659 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 3,97,637 ஆகவும், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,03,16,897 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,93,66,601 ஆகவும் உள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் “கரோனாவின் இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லை. டெல்லியில் பாதிப்புகள் குறைந்துவிட்டன. ஆனால் கடந்த 1.5 வருட அனுபவம், நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்பதை கற்றுக்கொடுத்துள்ளது. மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டவசமாக, கடந்த 6 மாதங்களாக தடுப்பூசியும் கிடைக்கிறது. மக்கள் அதிகளவில் தடுப்பூசி போடுவதன் மூலம் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், வரவிருக்கும் நாட்களில் நாம் வெற்றியைப் பெறலாம்” என்று பேசியுள்ளார்.

Related Stories
‘கரோனா பரிசோதனை இருமடங்காக்கப்படும்’ மக்களை காப்பாற்ற களமிறங்கிய அரசு!
கரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் கிடைக்கும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
‘கரோனா தடுப்பூசி’ எப்போது, எப்படி, என்ன விலையில், யாருக்கு முதலில் கிடைக்கும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதில்!
பிரதமர் மோடி நாட்டிற்கு ஒரு தெளிவான செய்தியை அளித்துள்ளார் - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்