கடந்த நிதியாண்டில் ரூ.49 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு!
நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் 1,580 ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குற்றங்கள் நடந்துள்ளன. அதில், ரூ.7 ஆயிரத்து 421 கோடியே 27 லட்சம் வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது”
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, மத்திய நிதித்துறை ராஜாங்க அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார்.
அதில் அவர், ”கடந்த 2019 - 2020 நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பான 10 ஆயிரத்து 657 குற்றங்கள் நடந்தன. ரூ.40 ஆயிரத்து 835 கோடியே 27 லட்சம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருந்தது. அதே சமயம், வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களிடம் மீட்கப்பட்ட தொகை குறைவாகவே உள்ளது. 2019 - 2020 நிதியாண்டில், வரி ஏய்ப்பு செய்தவர்களிடமிருந்து ரூ.18 ஆயிரத்து 464 கோடியே 7 லட்சம் மீட்கப்பட்டது.
#ParliamentQuestion
— Pankaj Chaudhary (@mppchaudhary) August 3, 2021
In my reply in Rajya Sabha, stated that GST authorities have recovered more than ₹1,900 crore in tax evasion in FY 2021-22 (upto June 2021) pic.twitter.com/WdZHDg0IHg
கடந்த 2020-2021 நிதியாண்டில், இந்த வரி ஏய்ப்பு குற்றங்கள், 12 ஆயிரத்து 596 ஆக அதிகரித்தன. இதில், ரூ.49 ஆயிரத்து 383 கோடியே 96 லட்சம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருந்து. இந்த ஆண்டும், வரி ஏய்ப்பு செய்தவர்களிடமிருந்து குறைவான தொகையே மீட்கப்பட்டது. அதாவது, ரூ.12 ஆயிரத்து 235 கோடி மட்டுமே மீட்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் 1,580 ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குற்றங்கள் நடந்துள்ளன. அதில், ரூ.7 ஆயிரத்து 421 கோடியே 27 லட்சம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
