ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - நம்பர் 1 இடம் பிடித்த அஸ்வின்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் இந்திய வீரர் அஸ்வின்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்த தொடரில் டாப் 2 இடங்களைப் பிடித்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.
ஜூன் 19 முதல் 23 வரை நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றது இந்திய அணி.
இந்நிலையில் இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் அஸ்வின் முதலிடம் பிடித்தார். 14 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை எடுத்தார் அஸ்வின். ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 145 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்
1) அஸ்வின் - 71 விக்கெட்டுகள்
2) பாட் கம்மின்ஸ் - 70 விக்கெட்டுகள்
3) ஸ்டூவர்ட் பிராட் - 69 விக்கெட்டுகள்
4) டிம் சவுதி - 56 விக்கெட்டுகள்
5) நாதன் லியன் - 56 விக்கெட்டுகள்
R Ashwin, on ???? of the game and the wicket-taking charts!
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 23, 2021
What a bowler ????https://t.co/gGHlFO4eE2 | #WTCFinal #INDvNZ pic.twitter.com/kyLpUgdsTL
