சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
தமிழகத்தின் முதல்வராக 5 முறை பணியாற்றியவரும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான கருணாநிதியின் உருவப் படத்தையும் சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உள்ளார்.
சென்னை மாகாணமாக இருந்தபோது, சட்டப்பேரவை 1921ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி உருவாக்கப்பட்டது. சென்னை மாகாண சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படவுள்ளது.இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ராம்நாத் கோவிந்த் அழைக்கப்பட்டார். மேலும், தமிழகத்தின் முதல்வராக 5 முறை பணியாற்றியவரும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான கருணாநிதியின் உருவப் படத்தையும் சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உள்ளார்.
இவ்விழாவில் பங்கேற்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், சில புத்தகங்களும் வழங்கினார். அவருடன் தமிழக ஆளுநர், பன்வாரிலால் ப்ரோகித், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரை முருகன், எ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் உடனிருந்தனர். பின்னர், குடியரசுத் தலைவர் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று மாலை, சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வில் அவர் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திருவுருவப் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் @rashtrapatibhvn அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புத்தகங்களை வழங்கி வரவேற்றார் pic.twitter.com/UmTEtpQNG6
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 2, 2021
