தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினால் இழப்பீடு வழங்க வேண்டும்!
2013-ம் ஆண்டு வன்னியர் சங்க மாநாட்டில் 58 பேருந்துகள் பாமகவினரால் சேதப்படுத்தப்பட்டதாக, தமிழக அரசு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.
அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தினால் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படும் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு வன்னியர் சங்க மாநாட்டில் 58 பேருந்துகள் பாமகவினரால் சேதப்படுத்தப்பட்டதாக, தமிழக அரசு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணையில் போது சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சேதத்தை மதிப்பிடுவதற்கும் இழப்பீடு வழங்குவதற்கும் விசாரணையில் பங்கேற்குமாறு பாமகவுக்கு உத்தரவிட்டார்.
இதுபோன்ற சேதங்களை மதிப்பிடவும், குற்றவாளிகளிடமிருந்து இழப்பீட்டைப் பெற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
