ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் சாலைகளில் தஞ்சமாகினர்
‘அந்தமான் நிகோபார் தீவின் போர்ட்பிளேர் நகரில் இன்று காலை 6.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகி உள்ளது. இந்நிலையில், அந்தமான் தீவு பகுதியில் இன்று காலை 9.12 மணியளவில் இன்னொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் சாலைகளில் தஞ்சமாகினர். சுனாமி குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை’ என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது.
@NDRFHQ EARTHQUAKE REPORT:
— ѕαtчα prαdhαnसत्य नारायण प्रधान ସତ୍ଯପ୍ରଧାନ-DG NDRF (@satyaprad1) August 3, 2021
????Strong Earthquake of ????Magnitude: 6.1,
????Occurred on: 03/08/2021, ????Time: 09:12:12 IST,
????Lat: 9.05 N & Long: 93.91 E, ????Depth: 10 Km,
????Region: Nicobar Islands, India
Source : NCS, New Delhi, MoES. pic.twitter.com/EjJFOnRbVU
