' நடவடிக்கை எடுக்காதவர்களை யூனிபார்ம் கழற்றி வீட்டிற்கு அனுப்புங்க..'- பெண் அரசியல் தலைவர் ஆவேசம்
'கர்நாடக அரசு மேகதாது அணைக் கட்டும் விவகாரத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய போது, மூன்று முறை வீடியோ அழைப்பு வந்தது. அதை எடுத்த போது நிர்வாணமாக நின்று பேசுகிறீர்கள்.'
' நடவடிக்கை எடுக்காதவர்களை யூனிபார்ம் கழற்றி வீட்டிற்கு அனுப்புங்க..'- பெண் அரசியல் தலைவர் ஆவேசம்
தனக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய இரு ஆண்களின் ஆணுறுப்பை அறுத்துவிடுவேன் என்று தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி பேசும் வீடியோவை வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் “இரண்டுபேரும் நீதிமன்றத்திலேயோ காவல் நிலையத்திலேயோ சரண்டராகவில்லை என்றால், உங்கள் ஆணுறுப்பை அறுத்து எடுத்துவிடுவோம்.
ஏற்கனவே தேர்தல் நேரத்தில் ஆபாச வீடியோ அனுப்பினீர்கள் என்று சென்ட் தாமஸ் டி.சி.-யிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை. 10 நாட்களுக்கு முன் ஆபாச வீடியோக்கள் அனுப்பினீர்கள் என்று சிட்டி கமிஷ்னரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை. கர்நாடக அரசு மேகதாது அணைக் கட்டும் விவகாரத்தை எதிர்த்து போராட்டம் நடத்த போடப்பட்ட கூட்டத்தில், மூன்று முறை வீடியோ அழைப்பு வந்தது. அதை எடுத்த போது நிர்வாணமாக நின்று பேசுகிறீர்கள்.
நான், தமிழர் முன்னேற்றப் படையின் கட்சித் தலைவர். எனக்குப் படைபலம், பண பலம் இருக்கிறது. எனக்குப் பிரச்சனை என்றால், நீதிமன்றத்திற்குச் சென்று எனக்கான நீதியைப் பெற்றுக்கொள்வேன். சாதாரண தமிழ் பெண் பாதிக்கப்பட்டால், நீதிமன்றத்திற்குச் சென்று நீதி வாங்கிக்கொண்டிருப்பார்களா?. நடிகைகள் புகார் கொடுத்தால், அமைச்சர் என்றும் பாராமல் கைது செய்கிறீர்கள். தமிழ் பெண்களின் மானம் என்றால் உங்களுக்குக் கேவலமாக இருக்கிறதா. 15 நாட்களில் இரண்டுபேரின் ஆண் உறுப்பையும் அறுத்து எடுத்துவிடுகிறோம். எனக்குத் தமிழ்நாடு அரசு வீர தீரச் செயலுக்கான விருதும் சம்மானமும் தர வேண்டும். நடவடிக்கை எடுக்காதவர்களை யூனிபார்ம் கழற்றி வீட்டிற்கு அனுப்பவும்” என்று கடுமையாகப் பேசியுள்ளார். (அவர் பல இடங்களில் ஒருமையிலேயே பேசியிருந்தார். அதை இங்குப் பயன்படுத்தவில்லை.
ஒரு ஆபாச வீடியோ என்பது பெண்களை முடக்கச் செய்யும் எளிய வழியாகப் பலரும் பயன்படுத்துவது உண்டு.
இந்த யுக்தி இன்று துவங்கப்பட்டது இல்லை. கேமரா அறிமுகமான நாட்களிலேயே இதுபோன்ற துன்புறுத்தல்கள் துவங்கிவிட்டது. பெண் ஒருவர் குளிக்கும் வீடியோக்களை மறைந்திருந்து எடுத்து, அதை அவருக்குக் காண்பித்து மிரட்டுவதுபோன்ற துன்புறுத்தல்கள் பழங்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது.
தற்காலத்தில் ஆண்கள் தங்களின் ஆபாச வீடியோக்களை அனுப்பி துன்புறுத்தும் வழக்கம் பெருகியுள்ளது.
