பிரபல பின்னணி பாடகி கல்யாணி மேனன் மரணம்!
1979ம் ஆண்டு வெளியான ‘நல்லதொரு குடும்பம்’. இந்தப்படத்தில் ’செவ்வானமே பொன் மேகமே..’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
‘மின்சார கண்ணா’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘சர்வம் தாளமயம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன். இவரத் தாயார் கல்யாணி மேனன்(வயது 80). பிரபல பின்னணி பாடகியான இவர், ’அபலா’ என்ற படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தமிழில் இவரது முதல் படம் 1979ம் ஆண்டு வெளியான ‘நல்லதொரு குடும்பம்’. இந்தப்படத்தில் ’செவ்வானமே பொன் மேகமே..’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
மலையாளத்தில் அதிக பாடல்களும் தமிழில் குறைவான பாடல்களுமே பாடியுள்ளார். தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். ஷங்கரின் ‘காதலன்’ படத்தில் ’இந்திரையோ இவள் சுந்தரியோ’, ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ படத்தில் இடம்பெற்ற 'குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ', சிம்பு நடிப்பில் வெளியான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் 'ஓமணப் பெண்ணே' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். கடைசியாகத் தமிழில் 96 படத்தில் இடம் பெற்ற காதலே காதலே பாடலை பாடியிருந்தார் கல்யாணி.
வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
