ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவை வாழ்த்திய பிரதமர் மோடி!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இதைவிடச் சிறப்பான தொடக்கம் நமக்கு அமைந்திருக்காது. மீராபாய் சானுவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவே மகிழ்ச்சி அடைந்துள்ளது. பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துகள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில், 49 கிலோ எடைப்பிரிவில், இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மீராபாய் சானுவை பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”டோக்கியோ ஒலிம்பிக்கில் இதைவிடச் சிறப்பான தொடக்கம் நமக்கு அமைந்திருக்காது. மீராபாய் சானுவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவே மகிழ்ச்சி அடைந்துள்ளது. பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Could not have asked for a happier start to @Tokyo2020! India is elated by @mirabai_chanu’s stupendous performance. Congratulations to her for winning the Silver medal in weightlifting. Her success motivates every Indian. #Cheer4India #Tokyo2020 pic.twitter.com/B6uJtDlaJo
— Narendra Modi (@narendramodi) July 24, 2021
