“அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வோர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்”! - சுந்தர் பிச்சை
அலுவலகம் வந்து பணி செய்ய எவரேனும் விரும்பினால் அவர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.இன்னும் ஒரு சில வாரங்களில், இந்த முறையானது அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. வரும் மாதங்களில் மற்ற நாடுகளுக்கும் இது விரிவு செய்யப்படும்.
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல அலுவலகங்கள், தங்கள் பணியாளர்களை, வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதனால், கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆகவே, பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மறுபடியும் அலுவலகம் வந்து வேலை செய்யுமாறு கூறி வருகின்றன.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது கூகுள். அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விளங்குபவர் சுந்தர் பிச்சை. இந்நிலையில் அவர், “அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இது, பணியாளர்கள் அலுவலகம் திரும்புவதை சிக்கலாக்கியுள்ளது. எனவே, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையானது வரும் அக்டோபர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
அலுவலகம் வந்து பணி செய்ய எவரேனும் விரும்பினால் அவர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.இன்னும் ஒரு சில வாரங்களில், இந்த முறையானது அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. வரும் மாதங்களில் மற்ற நாடுகளுக்கும் இது விரிவு செய்யப்படும். அந்தந்த நாடுகளின் தடுப்பூசி கையிருப்பின் அடிப்படையில் இந்த முறை அமல்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகள் அனைவருக்கும் மன அமைதி மற்றும் நிம்மதியை ஏற்படுத்தும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
