இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஓராண்டு தடை!
ண்டீஸ், குணத்திலகா, டிக்வெல்லா ஆகியோருக்கு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடையும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 6 மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், மெண்டீஸ், குணத்திலகா, டிக்வெல்லா ஆகியோர் பாதுகாப்பு வளையத்தை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்தனர். இது அங்குள்ள கேமராக்களில் பதிவானது. இதையடுத்து அவர்கள், பாதியிலேயே திருப்பி அலைத்துக் கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில், “கொரோனா விதிமுறைகளை மீறி, சாலைகளில் சுற்றித் திரிந்த மெண்டீஸ், குணத்திலகா, டிக்வெல்லா ஆகியோருக்கு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடையும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 6 மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை ரூபாயில் 1 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது” என, இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
#SriLankaCricket #COVID19
— TOI Sports (@toisports) July 30, 2021
Dickwella, Mendis, Gunathailaka banned for one year, fined 10 million rupees: @OfficialSLC
READ▶️https://t.co/T83Cod2Rtj pic.twitter.com/36KfQ4SMdr
