தோனி கொண்டாடி பார்த்திருக்கீங்களா? - ஒரே கேப்டன் என்றால் கொண்டாடாமல் இருக்க முடியுமா?
கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்த நாள் இன்று.
2013 ஆம் ஆண்டு ஜுன் 23 ஆம் தேதி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை அடித்தது. இந்திய அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார். ஜடேஜா 33 ரன்களும், ஷிகர் தவான் 31 ரன்களும் அடித்தனர்.
130 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 124 ரன்கள் மட்டுமே அடித்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் ஷிகர் தவான் 5 போட்டிகளில் 2 சதங்கள், 1 அரை சதம் என மொத்தம் 363 ரன்களை அடித்து அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்காக அவர் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டு அவருக்கு தங்க பேட்டும் விருதாக வழங்கப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தொடரை இந்திய அணி வென்றதன் மூலம் தோனி மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார். ஐசிசியின் 3 கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்தார் தோனி.
தோனி தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி 20 உலகக்கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்ற பிறகு 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று சாதனை படைத்தது.
???????? pic.twitter.com/ELYiDthawB
— ICC (@ICC) June 23, 2021
