ஒலிம்பிக் மல்யுத்தம்: பதக்கத்தை உறுதி செய்தார் ரவிக்குமார் தாஹியா !
அமெரிக்க வீரர் டேவிட் டெய்லரை எதிர்கொண்டார் தீபக் புனியா. ஆட்டத்தின் துவக்கம் முதலே அமெரிக்க வீரர் டேவிட் டெய்லர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஆண்களுக்கான மல்யுத்தத்தின் அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், 86 கிலோ எடைப்பிரிவினருக்கன காலிறுதி போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா, 6-3 என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தி இருந்தார்.
இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், அமெரிக்க வீரர் டேவிட் டெய்லரை எதிர்கொண்டார் தீபக் புனியா. ஆட்டத்தின் துவக்கம் முதலே அமெரிக்க வீரர் டேவிட் டெய்லர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். தீபக் புனியாவை ஒரு புள்ளி கூட எடுக்கவிடாமல் விளையாடிய டேவிட் டெய்லர், இறுதியில், 10-0 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்.
Ravi Kumar Dahiya storms into Finals of Men’s Freestyle 57 Kg Wrestling defeating Sanayev Nurislam of Kazakhstan;assures one more MEDAL for India ????????
— All India Radio News (@airnewsalerts) August 4, 2021
Go for GOLD champ ! #RaviDahiya #Tokyo2020 #TokyoOlympics #Cheer4India #RaviKumarDahiya https://t.co/6Fb5ZNIXGR
மேலும், 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் மற்றொரு இந்திய வீரரான, ரவிக்குமார் தஹியா, கஜகஸ்தான் வீரர் சனாயேவ் நூரிஸ்லாமை எதிர்கொண்டார். இதில், 9-2 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரவிக்குமார் தஹியா. இதன் மூலம் தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
