தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
ஒலிம்பிக் போட்டியில் தேர்வாகியுள்ள மதுரையைச் சேர்ந்த ரேவதி வீரமணி!
ரேவதி வீரமணி 4*400 தொடர் ஓட்டத்தில் தேர்வாகியுள்ளார்.
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி தேர்வாகியுள்ளார்.
ரேவதி வீரமணி 4*400 தொடர் ஓட்டத்தில் தேர்வாகியுள்ளார். அவரைத் தவிர தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெறும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 3 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
