ஒலிம்பிக் வில்வித்தை: தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி!
திபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனிபர் முனிசோ பெர்னாண்டஸை எதிர்கொண்டார். இதில், தீபிகா குமாரி முதல் செட்டை 25 - 26 என இழந்தார். ஆனால் 2வது செட்டை 28 - 25 எனக் கைப்பற்றினார். 3வது செட்டை 27 - 25 எனக் கைப்பற்றிய அவர், 4வது செட்டை 24 - 25 என இழந்த நிலையில், 5வது செட்டை 26-25 என கைப்பற்றி, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், வில்வித்தையில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. அதில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின், முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது, அதில், இந்தியாவின் தீபிகா குமாரி பூட்டானின் கர்மாவை எதிர்கொண்டார். இதில் தீபிகா குமாரி ஒரு செட்டை கூட இலக்காமல், 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று, நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில், திபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனிபர் முனிசோ பெர்னாண்டஸை எதிர்கொண்டார். இதில், தீபிகா குமாரி முதல் செட்டை 25 - 26 என இழந்தார். ஆனால் 2வது செட்டை 28 - 25 எனக் கைப்பற்றினார். 3வது செட்டை 27 - 25 எனக் கைப்பற்றிய அவர், 4வது செட்டை 24 - 25 என இழந்த நிலையில், 5வது செட்டை 26-25 என கைப்பற்றி, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
Tokyo Olympics: Deepika Kumari sails through to quarterfinals after 6-4 win in Round of 16 https://t.co/q5MBTfY9Lq
— Republic (@republic) July 28, 2021
