4 இல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற நியூசிலாந்து - இருந்தாலும் இந்தியாவுக்கு ஆபத்துதான்!
நியூசிலாந்து அணி ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை 4 முறை விளையாடியுள்ளது, ஆனால் ஒன்றில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது, அதுவும் இந்திய அணிக்கு எதிராக,.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நேற்று தொடங்க இருந்தது. ஆனால் மழை காரணமாக நேற்று இந்தப் போட்டி தொடங்கவில்லை.
டெஸ்டில் இரு அணிகளும் இதுவரை 59 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 21 முறையும், நியூசிலாந்து 12 முறையும் வெற்றியை பெற்றுள்ளது. 26 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.
டெஸ்ட் போட்டியில் வெற்றியின் அடிப்படையில் இந்திய அணியே முன்னிலையில் இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியா தோற்றது நியூசிலாந்திடம் தான். இதனால் இந்தியா அணி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அதேநேரம் நியூசிலாந்து அணி ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை 4 முறை விளையாடியுள்ளது, ஆனால் ஒன்றில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது.
1) 2000 ஆம் ஆண்டு ஐசிசி நாக்-அவுட் டிராபியின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழித்தியது நியூசிலாந்து அணி
2) 2009 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது நியூசிலாந்து அணி
3) 2015 ஆம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது நியூசிலாந்து அணி
4) 2019 ஆம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது நியூசிலாந்து அணி
???????? have won one match out of their four ICC tournament final appearances ????https://t.co/XMTQI1zVeW pic.twitter.com/Nt4xXDwko1
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 19, 2021

Related Stories
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - நியூசிலாந்து வீரர்கள் அறிவிப்பு
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்திய வீரர்கள் அறிவிப்பு
WTC Final 2021 - இந்தியா, நியூசிலாந்து - யார் பெஸ்ட்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 11 இந்திய வீரர்களை அறிவித்தது பிசிசிஐ