‘3 போட்டிகள்’ இந்தியாவை முதல்முறையாக நியூசிலாந்து வீழ்த்திய நிகழ்வு
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றது இந்திய அணி.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களையும், நியூசிலாந்து அணி 249 ரன்களையும் அடித்தது.
இந்திய அணியில் ரஹானே 49 ரன்களையும், விராட் கோலி 44 ரன்களையும் அடித்தனர். இதேபோல் நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே 54 ரன்களையும், கேன் வில்லியம்சன் 49 ரன்களையும் அடித்தனர்.
பின்னர் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லாதம் 9 ரன்னிலும், டெவான் கான்வே 19 ரன்னிலும் ஆட்டமிழந்த பிறகு கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் நிதானமாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.
கேன் வில்லியம்சன் 52 ரன்களும், ராஸ் டெய்லர் 47 ரன்களும் அடித்தனர்.
நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
Kane Williamson and his champion side ✨#WTC21 Final | #INDvNZ pic.twitter.com/5aM6mZNxaj
— ICC (@ICC) June 23, 2021
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றது இந்திய அணி.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் இந்திய அணியை தென்னாப்பிரிக்க அணி வென்றது இதுவே முதல் முறையாகும்.
